திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 25 டிசம்பர் 2017 (15:06 IST)

அதிமுக தோல்வி எதிரொலி: தினகரன் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் நீக்கம்!

அதிமுக சார்பில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக உள்ள மாவட்ட செயலாளர்களை பொறுப்பிலிருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததை அடுத்து இன்று தற்போது ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
 
இதில், தினகரனுக்கு ஆதரவாக உள்ள மாவட்ட செயலாளர்களை நீக்க கட்சியின் உயர்மட்ட குழு முடிவு செய்துள்ளது. தங்கத்தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், வி.பி.கலைராஜன், ரங்கசாமி, பார்த்திபன், முத்தையா ஆகியோரை பொறுப்பிலிருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
இந்த அறிவிப்பு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வியின் எதிரொலியாக பார்க்கப்படுகிறது.