1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 25 டிசம்பர் 2017 (13:01 IST)

தேசிய கட்சியை விட அதிக வாக்குகள் பெற்றது மகிழ்ச்சி - நாம்தமிழர் வேட்பாளர்

ஆர்.கே.இடைத்தேர்தலில் பாஜக கட்சியை விட அதிக வாக்குகள் பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக நாம் தமிழர் வேட்பாளர் கலைக்கோட்டுதயம் கூறியுள்ளார்.

 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அமோக வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட மதுசூதனன் இரண்டாம் இடம் பிடித்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார். திமுக சற்றும் எதிர்பார்க்காத நிலையில் டெபாசிட் இழந்தது. நாம் தமிழர் கட்சி நான்காம் இடம் பிடித்தது. பாஜக நோட்டாவை விட குறைவாக வாக்குகள் பெற்று கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது.
 
இதையடுத்து சமூக வலைதளங்களில் பலரும் பாஜகவை கேலி செய்து வருகின்றனர். நேற்று ராதாரவி, இன்னும் 200 ஆண்டுகள் ஆனாலும் பாஜகாவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்று கூறினார். இந்நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம், தேசிய கட்சியை விட அதிக வாக்குகள் பெற்று மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.