1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 25 டிசம்பர் 2017 (12:28 IST)

வாக்குகள் விற்கப்பட்டதால் தான் தினகரனுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது; தமிழிசை சௌந்தர்ராஜன்

சென்னை ஆர்கே நகரில் வாக்குகள் விற்கப்பட்டதால் தான் தினகரன் வெற்றி பெற முடிந்தது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
வாஜ்பாயின் 93-வது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன் ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்றது தேர்தலே அல்ல என்றார். தேர்தல் ஆணையம் ஆர்கே நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்கத் தவறியதாலேயே தினகரன் வெற்றி அடைந்திருப்பதாக அவர் கூறினார். ஆர்கே நகரில் தினகரனுக்கு கிடைத்த வெற்றி பணம் கொடுத்து வாங்கப்பட்ட வெற்றி என்றும் ஆர்.கே.நகரில் பாஜக தோல்வியடைந்ததைப் பற்றி  கவலைப்படவில்லை என்றும் மக்களிடம் மத்திய அரசின் நல்ல திட்டங்களை எடுத்து சொல்லி தமிழகத்தில் வலு பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.