1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 2 நவம்பர் 2017 (14:04 IST)

சென்னையில் மழை எப்படி இருக்கும்? நார்வே வானிலை மையம் கணிப்பு

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வரும் நாட்களில் சென்னையில் மழை எப்படி இருக்கும் என நார்வே வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 

 
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடக்கத்திலே கனமழை பெய்தது. தமிழகம் முழுவதும் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். சென்னையில் பெய்த கனமழையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இன்று சற்று மாறாக சென்னையில் வெயில் வந்துள்ளது. 
 
சென்னையில் வரும் செவ்வாய்கிழமை வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தை நார்வே வானிலை மையம் துல்லியமாக முன்கூட்டியே கணித்தது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் வரும் 7ஆம் தேதி வரை குளிர்ந்த காற்று வீசும். வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பில்லை என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இந்த வாரம் சென்னையில் மழை குறைந்தே காணப்படும் என்று கூறப்படுகிறது.