செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 2 நவம்பர் 2017 (12:01 IST)

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பதவி நீக்கம் செய்யக் கோரி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தமிழக ஆளுநரிடம் மனு அளித்திருந்தனர். இதுகுறித்து விளக்கம் அளிக்க சபாநாயகர் முன் 18 எம்.எல்.ஏக்கள் ஆஜராகாததால் அனைவரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டது.



 
 
இந்த தகுதி நீக்கத்தை எதிர்த்து 18 எம்.எல்.ஏக்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் தொடரந்தது.
 
இன்றைய விசாரணையில் 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது உள்ளிட்ட 5 வழக்குகளை கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையை சென்னை ஐகோர்ட்டின் நீதிபதி ரவிச்சந்திரபாபு செய்துள்ளார். எனவே இனிமேல் இந்த 5 வழக்குகளையும் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை செய்யும் என தெரிகிறது.