திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 2 நவம்பர் 2017 (11:10 IST)

கொடுங்கையூர் சிறுமிகள் மரணம்: தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

நேற்று காலை சென்னை கொடுங்கையூர் பகுதியில் மழை நீரில் விளையாடிய இரண்டு சிறுமிகள் தெரியாமல் அறுந்து கிடந்த மின்வயரை மிதித்ததால் தூக்கி எறியப்பட்டு பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவம் அந்த பகுதியை மட்டுமின்றி சென்னையையே உலுக்கிய நிலையில் இதுகுறித்து இன்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.



 
 
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சென்னை ஐகோர்ட், இதுகுறித்து தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் கொடுங்கையூர் மின்விபத்து போன்ற மின்சார விபத்துகள் மீண்டும் ஏற்படாமலிருக்க நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 
 
இந்த வழக்கின் விசாரணையின்போது பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர், ' கொடுங்கையூர் சிறுமிகள் உயிரிழந்தது தொடர்பாக 3 அதிகாரிகள் உட்பட 8 பேரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.