1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Kamalhaasan warning chennai rain floods

மழைநீரில் மூழ்கும் சென்னை - கமல்ஹாசன் எச்சரிக்கை

Kamalhaasan
சென்னையின் தென்மேற்கு வடமேற்கு பகுதிகள் நீரில் மூழ்க தயாராகின்றன என நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் எச்சரித்துள்ளார்.


 

 
இது பற்றி அவர் டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
 
இது அரசுக்கும் மக்களுக்கும் கொடுக்கப்படும் முன்னறிவிப்பு. உடனே செயல் பட்டால் வருமுன் காப்பதாகும். எனக்கு வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன.
 
சென்னையின் தென்மேற்கு, வடமேற்கு பகுதிகள் நீரில் மூழ்க தயாராகி கொண்டிருக்கின்றன. சேலையூர் ஏரி, கூடுவாஞ்சேரி நந்திவரம் பெல்ட் ஏரி, சிட்லப்பாக்கம் ஏரி, நாராயணபுரம், முடிச்சூர் ஏரிகள் நிரம்பி வழிய அதிக நேரம் ஆகாது.
 
நீர்நிலை ஆர்வலர்களுக்கோ, மக்களுக்கோ இந்த ஏரிகளின் கொள்ளளவு தெரியாது. நீர் வரத்து பாதைகளும், அது வெளியேறும் பாதைகளும் தெரியாது.  தெரியாது என்பதை விட நில அபகரிப்புக்கு வசதியாய் தெரியாமல் வைக்கப்பட்டிருக்கிறது என்பதே கசந்து குமட்டும் உண்மை.
 
நன்மங்கலத்தில் இருந்து மற்றொரு ஏரிக்கும் நீர் வரும் பாதையை மறித்து கட்டப்பட்ட கட்டிடத்தை இடிக்க நீதிமன்றம் 2015-ம் ஆண்டே உத்தரவு பிறப்பித்து விட்டது. எனினும், இன்றுவரை சட்டம் மீறப்பட்டே வருகிறது. அப்பகுதிகளில் வாழும் மக்கள் விழிப்புடன் இருக்கவும், குரல் எழுப்பவும் ஊடகங்கள் தயவாய் உதவவேண்டும். வருமுன் காப்போம். நித்திரை கலைப்போம்.
 
என அவர் குறிப்பிட்டுள்ளார்.
About Writer
Murugan
அடுத்த கட்டுரையில்
நெல்லை பேட்டையில் நீரில் மூழ்கிய கடைகள்: பல லட்ச மதிப்புள்ள பொருட்கள் சேதம்