1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (12:01 IST)

எதுக்குயா ஊரடங்கு... ஏகத்துக்கும் உயருமா கொரோனா எண்ணிக்கை?

மாவட்டங்களுக்கு இடையே பயணிப்பவர்களை தனிமைப்படுத்துதலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
 
கொரோனா பரவல் காரணமாக பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டனர்.  ஆனால் இப்போது இ பாஸ் முறை ரத்து செய்யப்பட்டதால் மாவட்டங்களுக்கு இடையே பயணிப்பவர்களில் அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை என கூறப்பட்டுள்ளது. 
 
முன்னதாக கொரோனா பரவல் காரணமாக பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆனால் தற்போது, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லுபவர்களுக்கு கட்டாய பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஊரடங்கு தளர்வுகளும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. எனவே, அடுத்தடுத்து வரும் நாட்களில் கொரோனா பரவல் அதிகரிக்குமோ என்ற எண்ணம் எழுந்துள்ளது.