திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 23 செப்டம்பர் 2021 (13:42 IST)

விடுமுறை ஊதியம்... மேலும் பல... போலீஸார் குஷி!

வார விடுமுறை மட்டுமின்றி பிறந்த நாள் விடுமுறை, மிகை நேர ஊதியம் உட்பட அறிவிப்புகள் போலீசாரை பெரிய அளவில் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

 
ஆம், தமிழ்நாடு போலீசாருக்கு வார விடுமுறை, பிறந்த நாள் விடுமுறை, மிகை நேர ஊதியம் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இது குறித்த விரிவான தகவல் பின்வருமாறு... 
 
1. காவலர்கள் உடல் நலனை பேணிக்க, தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்கும், வாரத்தில் ஒரு நாள் வாராந்திர ஓய்வு கட்டாயம். 
 
2. வார ஓய்வு தேவைப்படவில்லை என தெரிவிக்கும் காவலர்களுக்கும். ஓய்வு தினத்தன்று பணியில் இருக்கும் காவலர்களுக்கும் மிகைநேர ஊதியம் வழங்கப்படல் வேண்டும். 
 
3. காவல் ஆளிநர்களின் பிறந்த நாள் மற்றும் திருமண நாட்களில் அவர்களது குடும்பத்தாருடன் கொண்டாட ஏதுவாக அந்தந்தநாட்களில் அவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும்.
 
4. தமிழக காவல் துறையின் சார்பாக பிறந்தநாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துச் செய்தி மாவட்ட மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையின் வானொலி மூலமாக தெரிவிக்கப்பட வேண்டும்.