1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 1 ஜூன் 2022 (10:49 IST)

சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா: ஆய்வு நடத்த உத்தரவு

corona
தமிழகம் முழுவதும் கொரோனா  வைரஸ் பாதிப்பு கிட்டத்தட்ட முழு அளவில் குறைந்து விட்டாலும் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது 
 
நேற்று தமிழகத்தில் 98 பேருக்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில் இதில் 90 பேர் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் சென்னை மற்றும் செங்கல்பட்டு  மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.