1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Maharastra govt announce mask is necessary

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா; மாஸ்க் கட்டாயம்! – திடீர் உத்தரவு!

Maharashtra
இந்தியாவில் மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பாதிப்புகள் நீடித்து வரும் நிலையில் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். சமீப காலமாக கொரோனா பாதிப்புகள் குறைந்திருந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டு இயல்புநிலை திரும்பியது.

இந்நிலையில் தற்போது மீண்டும் பல பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. முன்னதாக 2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் தற்போது 3 ஆயிரத்தை தாண்டியுள்ளன. முக்கியமாக மகாராஷ்டிராவில் கொரோனா அதிகரித்து வருவதால் பொது இடங்களில் அனைவரும் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்தவும், தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்கவும் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
World Braille Day! கண் தெரியலைனா படிக்க முடியாதா? – சாதித்து காட்டிய ப்ரெய்லி!