1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 2 ஜூன் 2022 (19:53 IST)

கெட்டு போன சிக்கன்: சென்னை வடபழனி ஓட்டலை மூட உத்தரவு

food
கெட்டுப்போன சிக்கனை உணவுக்கு தயார் செய்ததால் சென்னை வடபழனியில் உள்ள பிரபல ஹோட்டலை அதிகாரிகள் மூட உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சென்னை வடபழனியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் இன்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீரென சோதனை செய்தனர் 
 
இந்த சோதனையில் கெட்டுப்போனது சிக்கன்கள், மீன்கள் உணவுக்கு பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து உணவு பாதுகாப்புத்துறை சதீஷ் தலைமையில் நடைபெற்ற இந்த சோதனையில் கெட்டுப்போன சிக்கன் மீன் பயன்படுத்துவது உறுதி செய்யப்பட்டதால் அந்த ஓட்டலை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டது
 
தந்தூரி சிக்கன் சாப்பிட்ட பிறகு மாணவர் ஒருவர் பலியானதை அடுத்து தமிழகம் முழுவதும் உணவுத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது