சென்னையில் முழு ஊரடங்கு குறித்து தமிழக அரசு விளக்கம்!
சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருவதால் சென்னையில் முழு ஊரடங்கு அமல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. தமிழக வணிகர் சங்கத் தலைவர் இதுகுறித்து கூறும்போது சென்னையில் 15 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தினால் கூட வணிகர்கள் ஒத்துழைக்க தயாராக இருப்பதாக அறிவித்தார்
இந்த நிலையில் சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறதா என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் இன்று நீதிமன்றத்தில் பதில் அளித்த தமிழக அரசு, ‘சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று விளக்கி உள்ளது
மேலும் தமிழகத்தின் கொரோனா நிலைமை குறித்து அரசின் ஆய்வில் குழு ஆய்வு செய்து வருவதாகவும் இபாஸ் வழங்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்படவில்லை என்றும் சென்னையில் இருந்து வெளியே செல்பவர்கள் யாரும் தடுத்து நிறுத்தப் =படவில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது
இந்த விளக்கத்தை அளித்து சென்னை உள்பட தமிழகத்தின் எந்த பகுதியிலும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்பு இல்லை என்று கருதப்படுகிறது