செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 11 ஜூன் 2020 (19:52 IST)

கொரோனா பரிசோதனை: சென்னை மாநகராட்சியின் புதிய உத்தரவால் பொதுமக்கள் அதிர்ச்சி

சென்னையில் கொரோனா பரிசோதனை செய்யப்படுபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சென்னையில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் இன்று மட்டும் 1407 பேர்களுக்கு சென்னையில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் சென்னையில் தனிக்கவனம் செலுத்தி கொரோனாவை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் சற்று முன் சென்னை மாநகராட்சி அறிவித்த ஒரு முக்கிய அறிவிப்பில் கூறியிருப்பதாவது:  பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இனிவரும் காலங்களில் பரிசோதனை மையங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொண்டால் பரிசோதனை மேற்கொள்ளும் நபர் மற்றும் அவரது வீட்டில் உள்ள அனைவரும் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  சென்னை மாநகராட்சியின் இந்த அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது