1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : வெள்ளி, 12 ஜூன் 2020 (11:19 IST)

9 மண்டலங்களில் ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா! – அதிர்ச்சியளிக்கும் சென்னை ரிப்போர்ட்!

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில் 9 மண்டலங்களில் கொரோனா பாதிப்புகள் ஆயிரத்தை தாண்டியுள்ளன.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மற்ற மாவட்டங்களை விடவும் சென்னையில் பாதிப்பு அதிகமாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27,318 ஆக உள்ளது. இதில் 5 மண்டலங்களில் 2 ஆயிரத்திற்கு அதிகமாகவும், 4 மண்டலங்களில் ஆயிரத்திற்கும் அதிகமாகவும் கொரோனா பாதிப்புகள் உள்ளன.

அதிகபட்சமாக ராயபுரத்தில் 4,584 பேரும், தண்டையார் பேட்டையில் 3,584 பேரும், தேனாம்பேட்டையில் 3,291 பேரும், கோடம்பாக்கத்தில் 2,966 பேரும், திருவிக நகரில் 2,550 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர திருவொற்றியூரில் 1,024 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பத்தூர், மணலி, மாதவரம் ஆகிய பகுதிகளில் பாதிப்பு ஆயிரத்தை நெருங்கியுள்ளது.