1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. no children allowed in tvk conference

தவெக மாநாட்டிற்கு சிறுவர், சிறுமியர்களுக்கு அனுமதி இல்லையா?

தவெக
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு செப்டம்பர் 23ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த மாநாட்டிற்கு சிறுவர் சிறுமிகள் அனுமதி இல்லை என்று கூறப்பட்டுள்ளது. 
 
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்த கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. 
 
இந்த மாநாட்டுக்கான காவல்துறை அனுமதி கேட்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் விரைவில் அனுமதி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மாநாடு குறித்து கருத்து கூறிய தமிழக வெற்றி கழகத்தின் பிரமுகர் புஸ்ஸி ஆனந்த், சிறுவர் சிறுமியர்களுக்கு மாநாட்டில் அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும் இந்த மாநாட்டில் ஆண்கள் 30 ஆயிரம் பேர், பெண்கள் 15 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்றும் முதியவர்கள் ஐந்தாயிரம் பேர் பங்கேற்பார்கள் என்றும் மாற்றுத்திறனாளிகள் 500 பேர் பங்கேற்பார்கள் என்றும் அறிவித்துள்ளார்.
 
Edited by Mahendran
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
பெண் டி.எஸ்.பி. தாக்கப்பட்ட சம்பவம்.. தலைமறைவாக இருந்தவர் கைது.. கைதான சில நிமிடங்களில் எலும்பு முறிவு..!