1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (14:35 IST)

தவெக மாநாடு மட்டுமல்ல, கோட் பட பேனர் வைக்கவும் அனுமதி இல்லை.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி..!

விஜய் ஆரம்பித்த தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கும் நிலை நிலையில் இந்த மாநாட்டிற்கு இதுவரை காவல் துறை அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது ரசிகர்கள் திரையரங்குகளில் பேனர்களை வைப்பது, கட் அவுட் வைப்பது வழக்கமான ஒன்றாக இருந்து வந்தது.

இந்த நிலையில் கோட் திரைப்படத்தின் பேனர்கள் திரையரங்குகளில் வைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே வைக்கப்பட்ட சில பேனர்களையும் கட்-அவுட்டுகளையும் காவல்துறையினர் அகற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்

விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளதால் தான் அவருக்கு சில நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாக கூறப்பட விஜய் ரசிகர்கள் மத்தியில் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Edited by Mahendran