1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Nithyannadha announced new coins for kailasa

கைலாசாவிற்கு தங்க நாணயங்கள் அறிமுகம்! – அலப்பறை செய்யும் நித்தி!

Kaislasa
கைலாசாவிற்கு வங்கி திறக்கப்போவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்திய நித்யானந்தா தற்போது தங்க நாணயம் வெளியிட போவதாக அறிவித்துள்ளார்.

பிரபல சாமியார் நித்யானந்தா தனக்கென தனியாக கைலாசா என்ற தீவை உருவாக்கியுள்ளதாக கூறியதிலிருந்து பரபரப்பாக உற்று நோக்கப்பட்டு வருகிறார். அடிக்கடி வீடியோ வெளியிட்டு வரும் நித்யானந்தா நெட்டிசன்கள் மத்தியில் ட்ரெண்டிங்க் ஆகவும் உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் கைலாசாவிற்கு ரிசர்வ் பேங்க் ஆப் கைலாசா திறக்கபோவதாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான மீம்கள் இணையத்தில் வைரலாகின.

இந்நிலையில் கைலாசாவிற்கு புதிய தங்க நாணயத்தை அறிமுகப்படுத்துவதாக நித்யானந்தா அறிவித்துள்ளார். கால் காசு முதல் 10 காசு வரை 5 வகையான தங்க நாணயங்களை விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிட உள்ளதாக அறிவித்துள்ள நித்யானந்தா, இந்த காசுகளை கொண்டு உலகின் 56 இந்து நாடுகளோடு வர்த்தகம் செய்ய உள்ளதாகவும் நித்யானந்தா தெரிவித்துள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
விநாயகர் சதுர்த்தி விவகாரம்; இந்து முன்னணி முடிவு என்ன? – மாலை அறிவிப்பு