1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. nirmalkumar says el nino is the reason for poewrcut

கரண்ட் கட்டுக்கு எல்.நினோதான் காரணம்!.. அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்...

ct nirmalkumar
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த பின் சென்னை உள்ளிட்ட பல இடங்களிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிகழ்கிறது. குறிப்பாக இரவு நேரங்களில் பல இடங்களில் மின்வெட்டு ஏற்படுகிறது. இதை கையில் எடுத்த திமுக, தவெக அரசே கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

இந்நிலையில், ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35 ரூபாய்க்கு கொள்முதல் செய்வதற்காக தமிழக அரசு ஒப்பந்தம் போட்டிருக்கிறது. இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ‘திமுக ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரம் 20 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டபோது தவெக அதை எதிர்த்தது. இப்போது 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்துள்ளனர்.

TANGEDCO மூலம் உற்பத்தியை குறைத்து வெளிச்சந்தை கொள்முதல் காவேக அரசு அதிகரித்துள்ளது. ஆந்திராவிலிருந்து மின்சாரத்தை கொள்முதல் செய்யவிருக்கிறார்கள். திமுக ஆட்சியில் மின் தேவை அதிகரித்தாலும் மின்வெட்டு ஏற்படவில்லை’ என அவர் கூறியிருந்தார்

இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் விளக்கமளித்த அமைச்சர் நிர்மல் குமார் ‘மத்திய தொகுப்பில் மின்சாரம் இல்லை என்பதால் யூனிட்டுக்கு ரூபாய் 35 கொடுத்து கேஸ் மின்சாரத்தை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. என்எல்சி மூலம் கிடைக்க வேண்டிய 1800 மெகாவாட் மின்சாரம் கிடைக்கவில்லை. மின்சாரத்தை கொள்முதல் செய்யவில்லை என்றால் 2 முதல் 3 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படும் நிலை இருக்கிறது..

15 நாட்களுக்கு மட்டும் யூனிட்டுக்கு 35 ரூபாய் எனும் நிலையில் 1500 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்யவிருக்கிறோம். எல் நினோ காரணமாக வெப்பநிலை குறையாததால் மின் தேவை அதிகரித்துள்ளது. இந்தியா முழுவதும் இதுதான் நிலை’ என கூறியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்! என்ன காரணம்?