1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Niligari district schools, colleges tomorrow holiday

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

school
தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு குறித்த செய்தி வெளியாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
அந்த வகையில் நேற்று நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது 
 
இதனையடுத்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப் பட்டது. அதேபோல் நாளையும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார் 
 
மேலும் மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கையை மீறி பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்கினால் பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
அடுத்த கட்டுரையில்
மாணவி ஸ்ரீமதி உடலை தூக்கி சென்ற 4 பேர்: புதிய சிசிடிவி வீடியோ காட்சி