1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tomorrow holiday for dharmapuri district because of aadiperukku

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு நாளை விடுமுறை: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

holiday
ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்திற்கு நாளை உள்ளுர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
 
தமிழகம் முழுவதும் நாளை ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட உள்ளது. ஆடிப்பெருக்கு விழா அன்று புதுமண தம்பதிகள் காவிரி ஆற்றங்கரையில் வழிபாடு நடத்துவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே 
 
இந்நிலையில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
மாவட்ட அளவில் நடைபெறும் உள்ளூர் திருவிழாக்கள், சிறப்பு நிகழ்வுகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன்படி, நாளை ஆகஸ்ட் 3ம் தேதி ஆடிப்பெருக்கை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
 
இதனை ஈடுசெய்யும் வகையில் 27ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாளை பள்ளி, கல்லூரிகள் , அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
 
ஆனால் அரசு கருவூலங்களும், சார்நிலை கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்."
 
 
அடுத்த கட்டுரையில்
துப்புரவு பணியாளராக அவதாரம் எடுத்த காவலர்! – பாராட்டும் மக்கள்!