திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 3 ஆகஸ்ட் 2022 (19:50 IST)

மாணவி ஸ்ரீமதி உடலை தூக்கி சென்ற 4 பேர்: புதிய சிசிடிவி வீடியோ காட்சி

srimathi body
மாணவி ஸ்ரீமதி உடலை தூக்கி சென்ற 4 பேர்: புதிய சிசிடிவி வீடியோ காட்சி
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூர் என்ற பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் இதுகுறித்து வழக்கு சிபிசிஐடி விசாரணை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மாணவி ஸ்ரீமதியின் உடல் தரையில் இருந்த நிலையில் அந்த உடலை 4 பேர் தூக்கி செல்லும் காட்சியின் சிசிடிவி வெளியாகியுள்ளது 
 
விடுதி உள்ளிட்ட 4 பேர் மாணவியின் உடலை தூக்கிச் சென்ற காட்சி உள்ள நிலையில் இந்த வீடியோ குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்
 
ஸ்ரீமதியின் உடலை தூக்கி சென்ற நான்கு பேர்களில் ஒருவர் பள்ளியின் தாளாளர் சாந்தி என்பவரும் உள்ளார் என்று கூறப்படுகிறது