1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 3 ஆகஸ்ட் 2022 (16:38 IST)

கேரளாவில் கனமழை: 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை.

rain
கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் தற்போது அம்மாநிலத்தில் உள்ள மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் கேரளாவில்  எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம் ஆகிய மூன்று மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை இந்த மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
ஏற்கனவே கேரளாவில் உள்ள பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் மூன்று மாவட்டங்களில் மட்டும் அதிக மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது பிறப்பித்துள்ளது