1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (08:29 IST)

இ-பாஸ் இல்லாம நீலகிரிக்குள்ள நுழைய முடியாது! – கலெக்டர் அதிரடி உத்தரவு!

தமிழகம் முழுவதும் இ-பாஸ் முறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில் நீலகிரிக்குள் இ-பாஸ் இல்லாமல் அனுமதிக்க முடியாது என மாவட்ட ஆட்சியர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ் நடைமுறை அமலில் இருந்து வந்த நிலையில் தற்போதைய தளர்வுகளில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதை காரணமாக கொண்டு நீலகிரியில் சுற்றுலா பயணிகள் வரவு அதிகரிக்கும் ஆபத்தை கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்டத்திற்குள் நுழைய இ-பாஸ் அவசியம் என உத்தரவிட்டுள்ளார் அம்மாவட்ட ஆட்சியர்.

முன்னதாக விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் பலர் நீலகிரிக்கு பயணிக்க தொடங்கியதால் இறப்பு, திருமண நிகழ்வு மற்றும் மருத்துவ உதவிகளுக்காக மட்டும் இ-பாஸ் பெறும் பழைய நடைமுறையை நீலகிரியில் பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் நீலகிரியிலிருந்து பிற மாவட்டங்களுக்கு செல்வதற்கு இ-பாஸ் தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.