1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. MK Stalin Cycling video viral in Twitter

உடம்பை ஆரோக்யமா வெச்சிக்கணும்! – அதிகாலையில் சைக்கிள் ஓட்டும் ஸ்டாலின்!

MK Stalin
கொரோனா ஊரடங்கில் அதிகாலையிலேயே மு.க.ஸ்டாலின் சாலையில் சைக்கிள் ஓட்டி சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா ஊரடங்கினால் பலர் வீடுகளில் இருந்து பணிபுரிவதாலும், சிலர் வேலைகளின்றி இருப்பதாலும் ஏற்படும் உடல் பருமனை குறைக்க உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடியற்காலை நேரத்தில் உடற்பயிற்சிக்காக சாலையில் சைக்கிள் ஓட்டி செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. திமுகவினர் பலரும் மு.க.ஸ்டாலின் சாலையில் சைக்கிள் ஓட்டி செல்லும் எளிமையை பாராட்டி ஷேர் செய்து வருகின்றனர்.

முன்னதாக சைக்கிளிங் செல்வதை ஊக்குவிக்கும் வகையில் நடிகர் ஆர்யா ட்விட்டரில் பதிவிட்டதும், அதை தொடர்ந்து பலர் ஆர்யாவை டேக் செய்து தாங்கள் சைக்கிள் ஓட்டி வருவதை பதிவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரையில்
கனவுகளுடன் வந்தார், கனவு நனவானதும் கிளம்பிவிட்டார்: தந்தை குறித்து விஜய்வசந்த்