உலகத்துல மனிதத்தன்மை இருக்கா? இல்லையா? – ஆவேசமான பிரசன்னா!

Prasanna
Prasanth Karthick| Last Modified ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2020 (15:10 IST)
உத்தர பிரதேசத்தில் கணவனை இழந்த பெண் ஒருவர் வேறு ஒருவருடன் வாழ்ந்து வந்ததற்காக கிராமத்தினர் அவர்களை மொட்டையடித்து தாக்கிய சம்பவத்திற்கு நடிகர் பிரசன்னா ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசம் மாநிலம் கனோஜ் மாவட்டத்தை சேர்ந்த 37 வயதான பெண் ஒருவரின் கணவர் சில மாதங்களுக்கு முன்பு இறந்துள்ளார். அவரது மறைவிற்கு பிறகு தனியாக வாழ்ந்த பெண்ணுக்கு மாற்றுத்திறனாளி ஒருவர் உதவி செய்து வந்துள்ளார். அவர்கள் இருவரும் கடந்த 3 வருடங்களாக உறவில் இருந்து வந்துள்ளனர்.

இதனால் பெண்ணின் உறவினர்களும், கிராம மக்களும் சேர்ந்து அந்த பெண்ணையும், மாற்று திறனாளி மனிதரையும் வலுக்கட்டாயமாக இழுத்து வந்து மொட்டை அடித்துள்ளனர். பிறகு செருப்பு மாலையை அணிவித்து அவர்களை அடித்து ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர். இதுகுறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில் நடிகர் பிரசன்னா இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “இன்னும் மனிதநேயம் மிச்சம் இருக்கிறதா? என்ன காரணம் இருந்தாலும் ஒரு சக மனிதனை இப்படி நடத்தலாமா? உலகத்தில் இதுபோன்ற வன்முறைகளுக்கு தண்டனையே இல்லையா? இது என்னை மிகவும் கோபமடைய செய்கிறது” என கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :