ரூ.10 நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை: மாவட்ட ஆட்சியர்
பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒரு சில தென் மாவட்டங்களில் இன்னும் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க முடியாது என்றும் பத்து ரூபாயை நாணயங்கள் செல்லாது என்றும் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். அரசு பேருந்துகளில் கூட பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இது குறித்த புகார்கள் அடிக்கடி வருவதை அடுத்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அந்த எச்சரிக்கையில் பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றம் என்றும் பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்த கடைக்காரர்கள் மீது புகார் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பது உறுதி செய்யப்பட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Edited by Mahendran