1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. other state registration omni bus, tn govt warning

வெளிமாநில பதிவெண் ஆம்னி பேருந்துகளை இயக்கினால் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை..!

பேருந்து
டிசம்பர் 16ஆம் தேதிக்கு பிறகு வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 
இது குறித்து போக்குவரத்து ஆணையர்  சண்முகசுந்தரம் அவர்கள் மேலும் கூறிய போது தமிழகத்தில்  வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுவதால் கோடி கணக்கில் இழப்பு ஏற்படுகிறது. 
 
எனவே வெளி மாநில பதிவெண் கொண்ட பேருந்துகளை தமிழக பதிவு எண்களாக மாற்ற வேண்டும். அதற்காக டிசம்பர் 16 வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 16க்கு மேல் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்கினால் தமிழகத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் 
 
இதனால் வெளிமாநில பதிவெண் கொண்ட பேருந்துகளை இயக்கி வரும் பேருந்து உரிமையாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ய முடியும்: அண்ணாமலை