தொடர்புடைய செய்திகள்
- நடுவானில் பயணிக்கு மாரடைப்பு.. சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!
- சென்னையில் இன்னும் 2 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!
- சென்னையில் ட்ரோன்கள் பறக்க தடை.. காவல்துறை அறிவிப்பு..!
- ஆவின் அலுவலகத்திலேயே பிறந்தநாள் கொண்டாடலாம்: சூப்பர் அறிவிப்பு..!
- நேற்றைய திடீர் சரிவுக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த தங்கம் விலை..!
தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்று முன் தெரிவித்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் என அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மிதமான மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் வளிமண்டல கிழக்கு திசை காற்று மற்றும் மேற்கு திசை காற்று சந்திப்பதன் காரணமாக தமிழ்நாட்டில் மழை பெய்யும் சாத்திய கூறுகள் நீடித்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் வேகம் மூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
