திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 23 மார்ச் 2023 (13:33 IST)

சென்னையில் இன்னும் 2 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

சென்னையில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் கடந்த சில நாட்களாக மட்டும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் மேலும் இரண்டு நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருக்கு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது 
 
அதேபோல் சென்னையில் இன்றும் நாளையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மழை பெய்யும் என்றும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva