வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 23 மார்ச் 2023 (10:50 IST)

சென்னையில் ட்ரோன்கள் பறக்க தடை.. காவல்துறை அறிவிப்பு..!

சென்னையில் நான்கு நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை என காவல்துறை அறிவித்துள்ளது. சென்னையில் மார்ச் 24, 25 ஆகிய தேதிகளில் ஜி20 மாநாட்டை நடத்துவதற்கான ஆயத்த கூட்டங்கள் நடைபெற உள்ளது. சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் இந்த கூட்டம் நடைபெற உள்ளதை அடுத்து 15 வெளிநாட்டு பிரதிநிதிகள் உள்பட பலர் வருகை தர உள்ளனர். 
 
இந்த நிலையில் வெளிநாட்டு பிரதிநிதிகள் தங்கும் இடங்கள், விழா நடைபெறும் இடம், மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் பயணம் செய்யும் இடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. 
 
இதனை அடுத்து இந்த பகுதியில் மார்ச் 22 முதல் 25 வரை நான்கு நாட்களுக்கு ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது. தடையை மீறி ட்ரோன்கள் பறக்க விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran