வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 19 செப்டம்பர் 2018 (10:49 IST)

திருமணமான ஆறே நாளில் புதுப்பெண் தற்கொலை: அதிர்ச்சி சம்பவம்

திருமணம் ஆன ஆறே நாளில் புதுப்பெண் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை வலப்பிரம்மன்காடை என்ற கிராமத்தை சேர்ந்தவர் நித்யா என்பவருக்கும் திருநாளூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரராஜன் என்பவருக்கும் கடந்த 12-ம் தேதி திருமணம் நடைபெற்றது.

இருவீட்டார்களும் சந்தோஷமாக இந்த திருமணத்தை நடத்தி வந்தபோதிலும் திருமணமான முதல் நாளில் இருந்தே மணமக்கள் இருவரும் சண்டையிட்டு வந்துள்ளனர். திருமணமான மூன்றாம் நாளே மணமகன், மணமகள் இருவரும் தனித்தனியாக தற்கொலைக்கு முயன்றதால் மணவீட்டார் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் நித்யாவின் பெற்றோர் தங்கள் மகளை அழைத்து செல்வதாகவும் சில நாட்கள் கழித்து மீண்டும் அழைத்து வருவதாகவும் மாப்பிள்ளை வீட்டில் கூறி தங்கள் வீட்டிற்கு அழைத்து சென்றனர். ஆனால் தாய்வீட்டிற்கு வந்த சில நிமிடங்களில் நித்யா மீண்டும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் இருவீட்டாரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள புதுக்கோட்டை போலீசார் மாப்பிள்ளை வீட்டாரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.