திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (12:25 IST)

நிலானி கூறிய அந்த ஒரு வார்த்தை - தற்கொலை செய்த காதலர்

நடிகை நிலானியின் காதலர் காந்தி லலித்குமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் வெளியே கசிந்துள்ளது.

 
படப்பிடிப்பில் இருந்த சீரியல் நடிகை நிலானியிடம், அவரின் காதலர் காந்தி லலித்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தன் காதலர் தன்னை திருமணத்திற்கு வற்புறுத்துவதாக நிலானி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, சென்னை கே.கே.நகர் ராஜா மன்னார் சாலையில் காந்தி தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். 
 
அதனையடுத்து, இறப்பதற்கு முன் காந்தி லலித்குமார் நண்பர்களுக்கு அனுப்பிய சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில், படுக்கையில் இருவரும் ஒன்றாக உறங்கும் காட்சி உள்ளிட்ட இருவரும் நெருக்கமாக பல காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
 
நிலானி நடித்த சில சீரியல்களில் லலித்குமார் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். அப்போதுதான் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக  மாறியுள்ளது. ஆனால், லலித்குமாரை விட்டு பிரிய நிலானி முடிவெடுத்துள்ளார். நிலானி இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்ற நிலையில் இருந்த லலித்குமார், விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார் என செய்திகள் வெளியானது.
 
போலீசாரிடம் நிலானி புகார் அளித்த போது, காந்தியுடன் நட்பாக மட்டுமே பழகினேன். ஆனால், அதை தவறாக புரிந்து கொண்டு என்னை அவர் திருமணத்திற்காக வற்புறுத்துகிறார் என புகார் அளித்திருந்தார். இதனை அடுத்தே, தன்னுடன் குடும்பம் நடத்தி விட்டு இப்படி நிலானி பொய் சொல்கிறாரே என்கிற கோபத்திலும், நிலானி தன்னை விட்டு பிரிய முடிவெடுத்ததையும் தாங்கிக்கொள்ள முடியாத காந்தி லலித்குமார் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுத்துள்ளார் எனத் தெரிகிறது.
 
இது தொடர்பாக நிலானியை போலீசார் விசாரிக்க முயன்றனர். ஆனால், அவரின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.