வியாழன், 8 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 17 செப்டம்பர் 2018 (17:20 IST)

உயிர் போகும் நேரத்திலும் நிலானி..நிலானி : புலம்பிய காதலர்

உயிர் போகும் நேரத்திலும் நிலானி..நிலானி : புலம்பிய காதலர்
நடிகை நிலானியை தீவிரமாக காதலித்த காந்தி லலித்குமார், இறக்கும் தருவாயிலும் அவரின் பெயரை உச்சரித்துக்கொண்டே இருந்தது தெரியவந்துள்ளது.

 
ஒரு படப்பிடிப்பில் இருந்த நடிகை நிலானியிடம், அவரின் காதலர் காந்தி லலித்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தன் காதலர் தன்னை திருமணத்திற்கு வற்புறுத்துவதாக நிலானி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, நேற்று சென்னை கே.கே.நகர் ராஜா மன்னார் சாலையில் காந்தி தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். 
 
இந்நிலையில், இறப்பதற்கு முன் காந்தி லலித்குமார் நண்பர்களுக்கு அனுப்பிய சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில், படுக்கையில் இருவரும் ஒன்றாக உறங்கும் காட்சி உள்ளிட்ட இருவரும் நெருக்கமாக பல காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
 
நிலானி நடித்த சில சீரியல்களில் லலித்குமார் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். அப்போதுதான் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக  மாறியுள்ளது. ஆனால், லலித்குமாரை விட்டு பிரிய நிலானி முடிவெடுத்துள்ளார். நிலானி இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்ற நிலையில் இருந்த லலித்குமார், விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார்.
 
ஐம்பது சதவீத தீக்காயங்கள் பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்த வேளையிலும், நிலானி.. நிலானி.. என்றே புலம்பியதாக அவரின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், லலித்குமாரின் காதலே அவனை கொன்றுவிட்டது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.