1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. new train coach for enjoy western ghats

மேற்கு தொடர்ச்சி மலையை ரசிக்க ஒரு வாய்ப்பு!.. விஸ்டாடோம் கோச் அறிமுகம்!...

train
மேற்குத் தொடர்ச்சி மலை என்பது இந்தியாவின் மேற்குப் பகுதியில் சுமார் 1600 கிலோ மீட்டர் நீளம் பரவியுள்ள ஒரு முக்கிய மலைத்தொடர். குஜராத்தில் தொடங்கி மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய 6 மாநிலங்கள் வழியாகக் கன்னியாகுமரி வரை இது நீண்டிருக்கிறது. தமிழகத்தில் நீலகிரி, ஆனைமலை, பழனி மலை, ஏலக்காய் மலை மற்றும் பொதிகை மலை ஆகிய இடங்களில் மேற்கு தொடர்சி மலை பரவியிருக்கிறது.

இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை அழகை ரசித்தபடி பயணிக்க குருவாயூரிலிருந்து மதுரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் நாளை (அக்டோபர் 22) முதல் விஸ்டாடோம் கோச் அறிமுகம் செய்யப்படவிருக்கிறது. பெரிய கண்ணாடி, சுழல் இருக்கை ஆகிய வசதிகள் கொண்ட இந்த கோச் செங்கோட்டை - புனலூர் இடையே இயற்கையின் அழகை ரசிக்க ஏற்றதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாளை முதல்வர் வருகிற ஜனவரி மாதம் வரை சோதனை முறையில் இந்த வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் போராட்டம்.. அனுமதி மறுத்த காவல்துறை.. தடை மீறப்படுமா?