1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. New Hindi protest will be start anytime said Stalin

தேசிய நெடுஞ்சாலைகளில் தமிழுக்கு ஏற்படும் அவமானம்

Hindi
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து திராவிட கட்சிகள் தீவிரமாக போராடியதால் மத்திய அரசு வேறுவழியின்றி இந்தி திணிப்பை தமிழகத்தில் நிறுத்தியது. இந்நிலையில் தற்போது மேலும் ஒரு இந்தி திணிப்பு போராட்டம் மற்றும் தமிழுக்கு ஏற்படும் அவமானத்தை எதிர்த்து ஒரு போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


 


தேசிய நெடுஞ்சாலைகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே ஊர்களின் பெயர்கள் எழுதி வந்துள்ள நிலையில் தற்போது மத்திய அரசு சத்தமில்லாமல் இந்தி பெயரை முதலிலும் அதன் கீழே தமிழிலும் பெயர் எழுதி வருவதோடு ஆங்கிலத்தில் எழுதும் நிலையை நீக்கிவிட்டது

ஆங்கிலத்துக்கு பதிலாக இந்தியில் எழுதுவது மட்டுமின்றி இந்திக்கு கீழே தமிழை எழுதி தமிழை அவமானப்படுத்துவதாக தமிழ் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்கள் இதுகுறித்து கூறியபோது, இந்திக்கு மகுடம் சூட்டுவோம், தமிழை மட்டம் தட்டுவோம் என பாஜக அரசு செயல்பட்டால் 'புதிய ”இந்தித் திணிப்பு” எதிர்ப்பு போராட்டத்தை சந்திக்க நேரிடும் என மத்திய அரசுக்கு எச்சரிக்கை செய்வதாக கூறியுள்ளார்.
About Writer
sivalingam
அடுத்த கட்டுரையில்
தேர்தல் முடிவு குறித்து ஜோதிட கணிப்பு: தேர்தல் ஆணையம் தடை