வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 14 நவம்பர் 2018 (12:04 IST)

உலக உருண்டைக்கு பாலூற்றினால் வெப்பம் குறைஞ்சிடுமா? எச்.ராஜாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்

பூமி வெப்பமாவதை தடுக்க உலகில் உள்ள விஞ்ஞானிகளும் சமூக ஆர்வலர்களும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, நிகழ்ச்சி ஒன்றில் உலக உருண்டைக்கு பாலூற்றியதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

அணையில் உள்ள தண்ணீர் ஆவியாகாமல் இருக்க தெர்மோகோல் வைத்து மூடும் முறையை பின்பற்றிய அரசியல்வாதிகள் உள்பட பல அரசியல்வாதிகளின் செயல்களை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் பூமி வெப்பமாவதை தடுக்க பூமி உருண்டை மீது தண்ணீர் மற்றும் பால் ஊற்றும் நிகழ்ச்சியில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டதாக ஒரு செய்தி புகைப்படத்துடன் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.