திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 7 நவம்பர் 2018 (13:32 IST)

சர்கார் படத்திற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ கடும் எச்சரிக்கை

சர்கார் படத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் இடம்பெற்றுள்ள காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டுமென நடிகர் விஜய்க்கு அமைச்சர் கடம்பூர்ராஜு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சர்கார் படத்தில் உள்ள சில காட்சிகள் பற்ற அரசுக்கு தகவல்  வந்துள்ளது. இதை உடனடியாக நீக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்தகட்ட நடவடிக்கை பர்றி முடிவெடுப்போம். என கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
 
மேலும் நடிகை வரலட்சுமி சிறையிலுள்ள சசிகலாவின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் தற்கால அரசியலை மையப்படுத்தி இந்தப் படத்தை எடுத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 
இது பற்றி அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது:
 
சர்காரில் அரசியல் நோக்கத்திற்காக எடுத்துள்ள காட்சிகளை இதுபோன்ற காட்சிகளில் நடித்துள்ளது வளர்ந்து வரும் நடிகர் விஜய்க்கு இது நல்லதல்ல. 
 
இந்த சர்ச்சைக்குறிய சில காட்சிகள் குறித்து  முதலமைச்சருடன் கலந்தாலோசித்து பிறகு முடிவு எடுக்கப்படும் .
 
இப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளை அவர்களாகவே (படக்குழுவினர்) நீக்கிவிட்டால் நல்லது என்று கூறி நடிகர் விஜய்க்கு இறுதியாக   எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
இது நேற்று ரிலீசாகி ஓடிகொண்டிக்கும் நிலையில் இன்று அமைச்சரிடமிருந்து நடிகர் விஜய்க்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது திரைத்துறை, மற்றும் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.