வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 9 மே 2023 (07:56 IST)

600க்கு 600 எடுத்த மாணவிக்கு நீட் இல்லாமல் மெடிக்கல் சீட்.. உங்க ஆர்வத்திற்கு ஒரு அளவே இல்லையா?

நேற்று பிளஸ் டூ ரிசல்ட் வெளியான நிலையில் அதில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நந்தினி என்ற மாணவி ஆறு பாடங்களிலும் 600க்கு 600 முழு மதிப்பெண்களை பெற்றுள்ளார். 
 
இந்த நிலையில் இந்த மாணவிக்கு வாழ்த்து கூறிய பல நெட்டிசன்கள் ஆர்வக்கோளாறு காரணமாக இந்த மாணவிக்கு நீட் தேர்வு இல்லாமல் மருத்துவ சீட்டு வழங்க வேண்டும் என்று பதிவு செய்துள்ளனர். 
 
ஆனால் மாணவி நந்தினி வணிகவியல் பாடக்குழுவில் படித்தவர் என்பதும் அவர் தமிழ் ஆங்கிலம் பொருளியல் வணிகவியல் கணக்குப்பதிவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் ஆகிய பாடங்களை படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மருத்துவ படிப்பு படிப்பதற்கு இயற்பியல் வேதியல் உயிரியல் படித்திருக்க வேண்டும் என்ற நிலையில் இந்த அடிப்படை கூட தெரியாமல் சமூக வலைதள போராளிகள் இந்த மாணவிக்கு நீட் தேர்வு இல்லாமல் மருத்துவ படிப்பு இடம் கொடுக்க வேண்டும் என்று கூறி வருவது நகைக்குரியதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் மாணவி நந்தினி நேற்றைய பேட்டியில் தனக்கு ஆடிட்டர் ஆவது லட்சியம் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva