1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. uber ola rapido drivers strike tomorow

உபேர், ஓலா, ரேபிடோ ஓட்டுனர்கள் நாளை ஸ்டிரைக்!..

uber rapido
உபேர். ஓலா. ரேபிடோ ஓட்டுநர்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருக்கிறார்கள்.நாடு முழுவதும் உள்ள பெருநகரங்களில் உபேர். ஓலா, ரேபிடோ போன்ற தனியார் கார் மற்று இரு சக்கர வாகனங்களை பொதுமக்கள் பெரிதும் பயன்படுத்துகிறார்கள்.. அதேநேரம் கட்டணம் அதிகமாக இருப்பதாக பல புகார்கள் அரசுக்கு வருகிறது..

இந்நிலையில்தான், குறைந்தபட்ச அடிப்படை கட்டண நிர்ணயம், பணி பாதுகாப்பு போன்ற பொருள்களை வலியுறுத்தி அவர்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள்
. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின்கட்காரிக்கு தொழிற்சங்கத்தினர் கடிதம் எழுதியுள்ளனர்.

தனியார் நிறுவனங்களை தன்னிச்சையாக கட்டணத்தை நிர்ணிக்கிறார்கள். இதன் காரணமாக போக்குவரத்து தொழிலாளர்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.. அவர்கள் குடும்பத்தை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.. எனவே வணிகரீதியான யணங்களுக்கு வெள்ளை நிற நம்பர் பிளேட் கொண்ட தனியார் வாகனங்களை பயன்படுத்தி தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கொள்கைகளை அவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்..
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
ஒரே நாளில் 10 ஆயிரம் விருப்ப மனுக்கள்!.. சி.டி.நிர்மல் குமார் பேட்டி...