1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 8 மே 2023 (14:48 IST)

தந்தை உயிரிழந்த சோகத்தோடு ப்ளஸ் 2 தேர்வு எழுதிய மாணவியின் மதிப்பெண் 479.. குவியும் பாராட்டு..!

தந்தை உயிரிழந்த போதிலும் அந்த சோகத்தோடு பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவி 479 மதிப்பெண் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
தமிழகத்தில் இன்று பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கடலுரை சேர்ந்த மாணவி கிரிஜா என்பவர் பிளஸ் டூ தேர்வு எழுதும் தினத்தில் ஆவரது தந்த ஞானவேல் திடீரென உயிரிழந்து விட்டார்.
 
தந்தையின் இறப்பால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் இருந்த நிலையில் அவர் அந்த சோகத்திலும் பள்ளிக்கு தேர்வு எழுத சென்றார். 
 
இந்த நிலையில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் மாணவ கிரிஜா 479 மதிப்பெண் பெற்ற சாதனை செய்துள்ளார். இதை அறிந்த பகுதி மக்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தந்தை இறந்தபோதிலும் சடலத்தை வீட்டில் வைத்துவிட்டு தேர்வு எழுதிவிட்டு பின்னர் திரும்பி வந்து தந்தைக்கு இறுதிச்சடங்கை கிரிஜா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran