திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 5 பிப்ரவரி 2018 (08:57 IST)

நெல்லையில் திருமணம் நடக்கவிருந்த ஒரு மணி நேரத்திற்கு முன்பு மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை

நெல்லை மாவட்டத்தில், திருமணம் நடைபெறவிருந்த ஒரு மணி நேரத்திற்கு முன்பு கல்யாண மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் குப்பளம்பாடு கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை. இவரது மகன் வெங்கடேஷ்(26). வெங்கடேஷ் காற்றாலை நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களுக்கு நேற்று காலை வள்ளியூரில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது. 
 
இந்நிலையில் வெங்கடேஷ் ஒரு அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். நீண்ட நேரமாக அவர் வெளியே வராததால் உறவினர்கள் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு வெங்கடேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
 
இதனையடுத்து வெங்டேஷை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயர சம்பவத்தால் அவரது குடும்பமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. வெங்கடேஷ் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணத்தைக் கண்டறிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.