1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Father and son dead in an accident

புதிய காரில் பயணம் செய்த தந்தை மகன் பரிதாப பலி

நெல்லை
நெல்லை மாவட்டம், கடையநல்லூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 60). இவரது மகன் பிரவீன் அருண் பிரசாத் (30), சென்னையில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். சொந்தமாக கார் வாங்க நினைத்த பிரவீன் நெல்லைக்கு சென்று புதிய காரை வாங்கிவிட்டு, தனது தந்தையுடன் காரில் சென்னைக்கு புறப்பட்டார்.

கடையநல்லூரைச் சேர்ந்த ராஜா என்பவர் காரை ஓட்டினார். இன்று அதிகாலை 2 மணியளவில் விருதுநகர்-மதுரை சாலையில் பட்டம்புத்தூர் விலக்கு பகுதியில் கார் விபத்துக்குள்ளானது.
 
இந்த விபத்தில் தியாகராஜன் சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயமடைந்த பிரவீன் மற்றும் கார் ஓட்டுனர் ராஜாவை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே பிரவீன் அருண் பிரசாத் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
வீட்டு சுவரில் மிகவும் மோசமான துர்நாற்றம்; வீட்டை வாங்கிய பெண்ணுக்கு ஏற்பட்ட அவலம்