1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. nellai jayakumar dead case investigation by police

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மர்ம மரணம்.. 8 நாட்களாகியும் தடயங்கள் சிக்கவில்லை..!

Jayakumar
நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வந்தும் மரணம் நிகழ்ந்து 8 நாட்களாகியும் தடயங்கள் சிக்கவில்லை என கூறப்படுகிறது.
 
ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக 10 தனிப்படைகளை அமைத்து போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில் அவரது வீட்டு தோட்டத்தில் மீண்டும் ஆய்வு செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும் மரணம் நிகழ்ந்த இடத்தின் சுற்று வட்டார கடை சிறு வியாபாரிகளிடம் புதிய நபர்கள் யாரேனும் சந்தேகப்படி வந்தார்களா எனவும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்,.
 
ஜெயக்குமார் மரணமடைந்து 8 நாட்களான நிலையில் சிறப்பு புலனாய்வு குழுவினர் நடவடிக்கை தீவிரப்படுத்தி வருகின்றனர். இருப்பினும் 8 நாட்களாகியும் ஜெயக்குமார் மரணம் தொடர்பான தடயங்கள் எதுவும் இதுவரை சிக்கவில்லை என்று காவல்துறை தரப்பில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
நுங்கு வாங்கியதால் தகராறு.. மண்டை சூடாகி மனைவி, மகளை குத்திய கணவன்! – தருமபுரியில் அதிர்ச்சி!