செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 8 மே 2024 (08:56 IST)

நெல்லை முதல் அயோத்தி ராமர் கோவில் வரை ஆன்மிக சுற்றுப்பயணம்! ரயில்வே துறை அறிவிப்பு..!

ramar
நெல்லையில் இருந்து அயோத்தி ராமர் கோவில் வரை 9 நாள் ஆன்மீக சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பை ரயில்வே துறை அறிவித்துள்ள நிலையில் இதனை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

பல்வேறு ஆன்மீக தலங்களுக்கு இந்தியன் ரயில்வே சுற்றுலா ரயில்களை இயக்கி வரும் நிலையில் தற்போது நெல்லையிலிருந்து அயோத்தி ராமர் கோவில் வரை சுற்றுலா ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் ஒன்பது நாட்கள் ஆன்மீக சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் இந்த ரயிலில் பயணம் செய்ய விரும்பும் பக்தர்கள் டிக்கெட் விலை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் நெல்லையிலிருந்து கிளம்பி கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம் மற்றும் சென்னை வழியாக காசி, திரிவேணி சங்கமம், கயா, அயோத்தி ஆகிய புண்ணிய தலங்களுக்கு சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் பயணம் செய்ய ஒரு நபருக்கு ரூ.18,550 என்றும் சிறுவர்களுக்கு ரூ.17,560 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த மேலும் தகவல் தெரிய வேண்டும் என்றால் www.irctctourism.com என்ற இணையதளத்தை பார்க்கலாம் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.

Edited by Siva