செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 28 பிப்ரவரி 2021 (19:36 IST)

திமுகவுடன் மீண்டும் நாளை பேச்சுவார்த்தை: இ.யூ.மு.லீக் கட்சி அறிவிப்பு

திமுக கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றாக தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது 
 
இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் இந்திய யூனியன் முஸ்லிம் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் அவர்கள் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தொகுதி பங்கீடு குறித்து நாளை முடிவு அறிவிக்கப்படும் என்றும் கூறினார்
 
மேலும் கடந்த தேர்தலில் எங்களுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டது என்பதால் அதனை கணக்கில் கொண்டே இந்தத் தேர்தலிலும் நாங்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தொகுதியை கேட்டுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு திமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்