1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. DMK start his alliance counsiling with other parties

மதிமுக, விசிக-வுக்கு திமுக அழைப்பு! – கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்பம்!

Tamilnadu
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் கூட்டணி குறித்து பேச தோழமை கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளன. இந்நிலையில் திமுகவும் தோழமை கட்சிகளுடன் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளது.

அதன்படி மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடன் நாளை தொகுதி பங்கீடு குறித்து பேச திமுக அழைப்பு விடுத்துள்ளது. முன்னதாக முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இன்று மாலை திமுகவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு! – ஆளுனர் உடனடி ஒப்புதல்!