அதிமுக வெற்று பேச்சு அரசு.. வெற்றிநடை அரசு அல்ல! – ப.சிதம்பரம் கேள்வி!

Prasanth Karthick| Last Modified ஞாயிறு, 28 பிப்ரவரி 2021 (15:16 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாக கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டது குறித்து ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் மற்றும் விவசாய நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ப.சிதம்பரம் ”அதிமுக வெற்று பேச்சு அரசு, வெற்றிநடை போடும் அரசல்ல. தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் நகை கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இதற்காக பட்ஜெட்டில் எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. நிதி ஒதுக்கீடு இல்லாமல் எவ்வளவு கடன் தொகை என தெரியாம்ல் தள்ளுபடி என்று அறிவித்துள்ளது கண் துடைப்பு நாடகம்” என தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :