1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 13 செப்டம்பர் 2020 (16:47 IST)

நீட் ரத்து ராகுல் போடும் கையெழுத்தில் உள்ளது... நாராயணிசாமி!!

ராகுல் காந்தி தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் முதல் கையெழுத்தாக நீட் ரத்து செய்யப்படும் என நாராயணசாமி நம்பிக்கை. 
 
நீட் தேர்வு அச்சம் காரணமாக நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் இன்று நீட் தேர்வு நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. 
 
அதன்படி புதுச்சேரியில் 15 மையங்களில் 7,137 மாணவ மாணவியர் நீட் தேர்வு எழுதுகின்றனர். இவர்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட புதுச்சேரி முதல்வர் நாராயணி சாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது பின்வருமாரு பேசினார். 
 
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பிரதமருக்கும் மத்திய அரசுக்கும் பலமுறை கோரிக்கை வைத்தும் நிராகரித்துள்ளனர். மாணவர்களின் உயிரோடு மத்திய அரசு விளையாடுகிறது. 
 
தற்பொழுது மாணவர்களும் பெற்றோரும் அவதிப்படுவதை மத்திய அரசு நேரடியாகப் பார்க்கிறது. மத்தியில் காங்கிரஸ் ராகுல் காந்தி தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் முதல் கையெழுத்தாக நீட் ரத்து செய்யப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
 
இதற்கு முன்னர் நீட் தேர்வு அச்சம் காரணமாக யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்றும், இன்னும் 8 மாதத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.