வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 13 செப்டம்பர் 2020 (11:39 IST)

8 மாதத்தில் நீட் தேர்வு ரத்தாகும் என ஸ்டாலின் கூறுவது தவறான தகவல்: அண்ணாமலை

8 மாதத்தில் நீட் தேர்வு ரத்தாகும் என ஸ்டாலின் கூறுவது தவறான தகவல்
நீட் தேர்வு அச்சம் காரணமாக நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று தனது டுவிட்டரில் கூறியபோது நீட்தேர்வு அச்சம் காரணமாக யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்றும், இன்னும் 8 மாதத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்
 
இந்த நிலையில் இதுகுறித்து சமீபத்தில் பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை கூறியபோது ’எட்டு மாதத்தில் நீட்தேர்வு ரத்தாகும் என ஸ்டாலின் கூறுவது தவறான தகவல் என்றும், நீட்தேர்வு உச்சநீதிமன்றத்தின் உத்தரவு என்பதால் நீதிமன்ற அவமதிப்பாகும்’ என்றும் கூறியுள்ளார். அண்ணாமலையின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது